உலக நடப்புகள்புதியவை

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய துணிகளை பராமரிக்கும் முறை

பெண்களே ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம்.
ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை, துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில் பார்த்து படித்து கொண்டு செய்தால் துணிகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம். ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது பழமொழி. மேலும், ‘ஆடையில்லா மனிதன் அரைமனிதன்’ என நம்முடைய முன்னோர்கள் ஆடைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல தத்துவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவரது ஆடை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது தகுதியை நிர்ணயித்துவிடுவார்கள். ஆகையால் தான் தற்போதைய சூழ்நிலையில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடைகளை வாங்கும் விஷயத்தில் அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால்தான் சில ‘ஜவுளிக்கடைகள்’ இப்போது ‘ஜவுளிக் கடல்’ களாக மாறிவருகின்றன. இந்த அளவுக்கு ஆடைகளை வாங்கும் போது கவனம் செலுத்தும் நாம் அதனை பராமரிக்கும் விஷயத்தில் விழிப்புணர்வாக இருக்கிறோமா என்றால் இல்லை.

விலையுயர்ந்த துணிகளை வாங்குகிற நமக்கு, அதைப் பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துணியை எந்தெந்த ரக ஆடைகளை எப்படித் துவைக்க வேண்டும் என்றும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் பார்ப்போம். ஒவ்வொரு துணியையும் அலசுவதற்கு முன் அதன் பராமரிப்பு முறைகளை (துணிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் லேபிள்களில்) பார்த்து படித்துக்கொள்வது நல்லது. குளிர்ந்த நீரில் அலச வேண்டுமா, காய வைக்கும் முறை, சொட்டு நீர் முறையை பயன்படுத்த வேண்டுமா போன்ற குறிப்புகளை படித்து அதன்படி செய்வது துணியின் தன்மையையும் நிறத்தையும் காக்கலாம்.

1 கப் வினிகர் இருந்தால் போதும் உங்கள் துணி புதிது போல மின்ன வைக்கலாம். டிடர்ஜென்ட் மற்றும் குளிர்ந்த நீர் இல்லாமல் வெறும் வினிகரை கொண்டு அலசினாலே துணிகளில் உள்ள அழுக்கு, வியர்வை நாற்றம் நீங்கி துணிகளின் நிறத்தை அப்படியே புதிது போல் காக்கிறது. உங்கள் துணிகளை வெறுமனே ஒரு பக்கெட் தண்ணீரில் உள்ளங்கை அளவு உப்பு சேர்த்து அதில் ஊற வைத்தால் போதும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு குளிர்ந்த நீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆடைகளை திருப்பி போட்டு அதன் உட்புற பகுதியை டிடர்ஜென்ட் கொண்டு அலசினால் அடர்ந்த நிற ஆடைகள் மங்கி போவதை தடுக்கலாம். சூடான நீரில் உங்கள் கைகளைக் கொண்டு ஆடைகளை துவைப்பது நல்லது. 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் மைல்டு டிடர்ஜெண்ட் சேர்த்து 10 நிமிடங்கள் அலசி மிதமான வெயிலில் காய வைத்தால் போதும்.

இதனால் ஆடைகளின் நிறம் மங்காது. சூடான வெப்பநிலை ஆடையிழைகளின் தன்மையை பாதிப்படைய செய்யும். எனவே பெண்களே எப்பொழுதும் குளிர்ந்த நீரில் அலசுவது நல்லது. ஸ்டார்ச் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை சலவை செய்யும் போது அதனால் ஆடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல்களை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker