புதியவைமருத்துவம்

நீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்?

சர்க்கரைநோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்? என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

“சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் பாதிக்கப்படுவது கால்கள். ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை பரிசோதிக்க வேண்டும்’ என்று பொதுவாக மருத்துவத்தில் சொல்வார்கள்.

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்துவிடும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடும். நரம்புகள் பாதிப்படையும். பாதத்தைப் பொறுத்தவரை எலும்புப் பகுதியில் பாதிப்பு, காலில் சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும், வீக்கம் இருக்கும்; வலி தெரியாது, உணர்ச்சி இருக்காது. பாதிப்புகள் எதுவும் தெரியாத நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் அசைவு கொடுப்பதால் அழுத்தம் ஏற்பட்டு புண் பெரிதாகும்.

 

 

 

 

* காலில் புண் ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது கால் நரம்புகளே. காலப்போக்கில் பாதிப்படைந்த பகுதியில் அழற்சி ஏற்படும். அதைக் கவனிக்காமல் விடுவதால் நரம்பில் பாதிப்புகள் தீவிரமடைந்து தசைகளின் செயல்பாடுகள் தடைபடும். காலை ஊன்றமுடியாமல் அவதிப்பட நேரிடும்.

* கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கால்களைப் பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், தங்களின் தோல், பாதம், ஊட்டச்சத்து, எலும்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

கால்களை எப்படிப் பராமரிப்பது?

* சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்குமுன் சூடான நீரைக் கொண்டு கால்களைக் கழுவ வேண்டும். காலில் உணர்ச்சி இருக்கிறதா? என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

* கால் கழுவும்போது, காலில் அடிபட்டிருக்கிறதா? புண், காயங்கள், சிராய்ப்புகள் காணப்படுகிறதா? தடித்திருக்கிறதா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

* கால் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வறண்டு போகும்பட்சத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் லோஷன், க்ரீம் பயன்படுத்துவது நல்லது.

* கால் விரலின் நகங்களை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். நகம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நகம் வெட்டும்போது, மிகவும் கவனமாக வெட்ட வேண்டும். சதையை வெட்டிவிட்டால், அது புண்ணாகி பிரச்னை ஏற்படுத்தும்.

 

 

 

 

* கால் நகங்களைப் பாதுகாக்க, லெதரால் செய்யப்பட்ட ஷூ-ஷாக்ஸ் போன்ற காலணிகளை அணிவது நல்லது. காலின் அளவுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

* காலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். உட்காரும்போது கால்களை நீட்டி உட்கார்வது, காலுக்கான தனிப்பயிற்சிகள் செய்வது அவசியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker