ஆரோக்கியம்புதியவை

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வதில் பிரச்சனை ஏற்படும்.

நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சனை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சனை வருவதுண்டு.

30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker