பெண்களே சுகப்பிரசவம் உண்டாக இந்த பழத்தை தினமும் சாப்பிடுங்கள்
கர்ப்பமாக இருக்கும் எல்லா பெண்களுக்குமே இருக்கிற ஆசை தனக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பது தான். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகிய எல்லாம் சேர்ந்து பெரும்பாலும் சிசேரியன் குழந்தைகளையே கொடுக்கிறது.
ஆனாலும் நம்முடைய முன்னோர்கள் கையாண்டு வந்த சில விஷயங்களை நாமும் கவனத்துடன் கையாண்டால் சுகப்பிரசவம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அப்படி சுகப்பிரசவம் ஆவதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. அதுதான் நார்த்தங்காய் சாப்பிடுவது.
நார்த்தம் பழம் சாப்பிட்டால் சுகப்பிரசவம் நடந்துவிடுமா என்று தானே கேட்கிறீர்கள்? ஆம். நார்த்தம்பழத்தை இப்படியெல்லாம் கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
நார்த்தம்பழச்சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர சுகப்பிரசவம் உண்டாகும்.
நார்த்தம்பழச்சாறெடுத்து அதோடு தேன், பனங்கற்கண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து குடித்துவர உடல் வலிமையாகும். சுகப்பிரசவம் உண்டாவதற்கான உடல் மற்றும் மனவலிமை கிடைக்கும்.
நார்த்தம் பழத்தை சாறெடுத்து அதோடு வெந்நீர் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் கடுமையான வாயுத்தொல்லை, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும்.
தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். உடல்சூடும் பித்தமும் குறையும்.