சமையல் குறிப்புகள்புதியவை

கடுகு சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – நான்கு ஆழாக்கு
  • மிளகாய் வற்றல் – 20
  • கடலைப்பருப்பு – 40 கிராம்
  • கடுகு – 20 கிராம்
  • மஞ்சள் பொடி – சிறிதளவு
  • பெருங்காயத்துள் – சிறிதளவு
  • தேங்காய் துருவல் – 100 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 20 கிராம்
  • புளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவு.

செய்முறை

  • அரிசியை சாதமாக சமைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது பக்குவத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
  • கடுகை வெறும் கடாயில் போட்டு வெடிக்கும் அளவுக்கு வறுத்துகொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், வறுத்த கடுகு, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, புளி, உப்பு இவற்றை வைத்து வெண்ணெய் போல அரைத்து சாதத்தில் நன்றாக கலக்கவும்
  • பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு சூடானதும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து பின்னர் அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.
  • சூப்பரான கடுகு சாதம் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker