புதியவைமருத்துவம்

10 நொடிகளில் புற்றுநோயை கண்டுபிடிக்கலாம்

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்கும் (quick cancer detect tips) உபகரணத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கப்படும் புற்றுநோயை எளிதாக குணப்படுத்த முடியும்.

சில அறிகுறிகளை நாம் ஒதுக்கி புறந்தள்ளுவதும் கடைசியில் புற்றுநோயின் அபாயத்தில் கொண்டு விடுகிறது.

இந்நிலையில் வெறும் 10 நொடிகளில் புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்கும் உபகரணத்தை உருவாக்கி டெக்சாஸ் பல்கலைகழக மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

 

 

 

 

 

Science Translational Medicine எனும் அறிவியல் இதழில் வெளியான தகவலின் படி, MasSpec Penவால் புற்றுநோயை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியும்.

இதன்மூலம் மிக பாதுகாப்பான முறையில் புற்றுநோய் கட்டிகளை நீக்கலாம்.

MasSpec Pen இயங்குவது எப்படி?
பாதிக்கப்பட்ட இடத்தில் MasSpec Pen-வை வைக்கும் போது, சிறிது நீர்த்துளியை வெளியேற்றுகிறது.

குறித்த நீர்த்துளியானது, நம் உடலில் உள்ள உயிரணுக்களின் தன்மையை எடுத்துக் கொண்டு மீண்டும் MasSpec Pen-க்குள் செலுத்துகிறது.

கடைசியாக MasSpec Penஆல் Chemical Fingerprint உருவாக்கப்படும், இதன்மூலம் மருத்துவர்கள் மிக எளிதாக இயல்பான மற்றும் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

MasSpec Pen-ஆல் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான உயிரணுக்களின் தன்மையை ஆராய முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இதன்மூலம் சிறிய அளவிலான புற்றுநோய் செல்களை கூட கண்டுபிடிக்க முடிவதால், மீண்டும் புற்றுநோய் செல்கள் உடலுக்குள் வளராமல் தடுக்க முடியும்

 

 

 

இதுகுறித்து Livia Eberlin என்பவர் கூறுகையில், நோயாளிகளுக்கு உபயோகப்படுத்தும் போது குறித்த தொழில்நுட்பத்தின் மகத்துவம் புரியும், மிக எளிதாக மருத்துவர்கள் இதனை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker