மது அருந்திவிட்டு, இதை குடித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு!
மது அருந்தியும் புகை பிடித்தும் இருக்கும் ஒருவர் உடனடியாக சூடான தேநீர் அருந்துவது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று என சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நேஷன் நேச்சுரல் சைன்ஸ் ஃபவுண்டேஷன் ஆஃப் சைனா மற்றும் நேஷனல் கீ ரிசர்ச் அண்ட் டெவலப்மேண்ட் புரொகிராம்( National Natural Science Foundation of China and National Key Research and Development Program) இணைந்து புற்றுநோய் தாக்கியவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
30 முதல் 79 வயது நிரம்பிய சுமார் 4 ½ லட்சம் பேரிடம் (பெண்கள் உட்பட) கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மது அருந்தியும் புகை பிடித்தும் இருக்கும் ஒருவர் உடனடியாக சூடான தேநீர் அருந்துவது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது ஆய்வின் முடிவில் கண்டறிப்பட்டுள்ளது.
5 முறை புகைபிடித்து விட்டு, 15 கிராம் அளவு மது உட்கொண்டு உடனடியாக 65 முதல் 149 டிகிரி பாரன்ஹீட்டில் தேநீர் உட்கொள்வது புற்றுநோய்க்கான வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்கிறது.
மேலும் இது புற்றுநோயால் இறப்பு உண்டாவதை ஐந்து மடங்கு அதிகப்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவதால் தொண்டைக்குழி, உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், இவ்வகைப் புற்றுநோய் தாக்கியவர்கள் உயிர் பிழைக்கும் விகிதம் குறைவு என்றும் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.