Uncategorised

உடலில் அசிங்கமாக இருக்கும் மருக்கள் உடனடியாக மறைய வைக்க இத யூஸ் பண்ணுங்க!

சரும பிரச்சினைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கக் கூடியதாகும். அதில் முக்கியமான ஒன்று தான் சருமத்தில் வரும் மருக்கள் பிரச்சினை. இந்த மருக்கள் உங்களது அழகினை குறைத்து காட்டும். உடல் பகுதிகளில் மருக்கள் இருந்தால் கூட பரவாயில்லை. அதுவே முகத்தில் இருந்தால், உங்களது முகத்தின் தோற்றத்தையே இந்த மருக்கள் மாற்றி காட்டும்.

இந்த மருக்களை நீக்க சில பார்லர் டிரிட்மெண்டுகளும் உள்ளன. ஆனால் பலர் பார்லர் டிரிட்மெண்ட் என்றாலே பயப்படுகின்றனர். நீங்கள் பார்லர் சென்று இந்த மருக்களை நீக்குவதாக இருந்தாலும் கூட நல்ல தரமான பார்லருக்கு சென்று நன்கு பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணரிடமே சிகிச்சை பெற வேண்டும். இத்தனை சிரமம் எதற்கு என்று கருதுபவர்கள் வீட்டிலே மிக சீக்கிரமாக இந்த பருக்களை நீக்கி விடலாம்.

நீங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் தொடர்ச்சியாக இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு முறையை ஆவது முயற்சி செய்து பாருங்கள். இதற்கான பலன் நிச்சயமாக சீக்கிரமே கிடைக்கும்.

 

 

 

 

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆளி என்ற விதையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் பருவில் தடவிவர வேண்டும். அவ்வாறு தடவி வந்தால் மரு நாளடைவில் கொட்டிவிடும். பேஸ்டை தடவி விட்டு அதன் மேல் பேண்டேஜ் ஒட்டினால் மிக நல்லது.

கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும். மேலும் மருக்கள் வளராமல் தவிர்க்கலாம். கற்பூர எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம்.

சுண்ணாம்பும் சரும பிரச்சினைகளை போக்க ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.

உருளைக்கிழங்கு அனைத்து சரும பிரச்சினைகளை போக்கவும் மிகவும் சிறந்ததாகும். உருளைக்கிழங்கினை மசித்து பசை போல் ஆக்கி தினமும் தடவி வர மரு பொரிந்துவிடும்.

வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

 

 

 

 

ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாகும். ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.

இந்த முறைக்கு முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker