உலக நடப்புகள்புதியவை

பெண்களே 35 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா?

பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். பெண்கள் ஏன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கின்றனர். பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த காலத்துப் பெண்கள் படிப்பு மற்றும் வேலைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரின் துணையை ஏற்க மறுத்து திருமண ஆசையை விடுத்து தனித்து வாழவே விரும்புகின்றனர்.

 

 

 

 

பெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது. வாருங்கள் இப்போது 35 வரை அப்படி திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்…

எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமாகத் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக் கூடும்.

கல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.

தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.

நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும்.

நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா? இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.

 

 

 

 

சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக. அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker