தோள்பட்டை, வயிற்று பகுதிக்கான உடற்பயிற்சி
தோள்பட்டை தசைகளை வலுவாக்கவும், இடுப்பு எலும்புகளின் வளைவுத்தன்மையை அதிகரிக்கவும் இந்த இரு பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரலாம்.
நாற்காலியில் சாய்ந்தபடி அமர்ந்து, இரு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்ட வேண்டும். பின், இரு கைகளையும் மடக்கி, தோள்பட்டையின் மூட்டுகளைப் பிடித்து, காதோடு ஒட்டியபடி, முன்பக்கமாக 5 முறையும், பின் பக்கமாக 5 முறையும் சுழற்ற வேண்டும்.
பலன்கள்: தோள்பட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளில் இறுக்கம் குறைவதுடன், வளைவுத்தன்மையும் அதிகரிக்கும். தசைப்பிடிப்பும் நீங்கும். நுரையீரல் விரிவடையும். சுவாசப் பிரச்சனைகள் சரியாகும்.
நின்ற நிலை பயிற்சி (Standing Pose)
நேராக நின்று, வலது காலைத் தூக்கி கைகளால் கோத்துப் பிடிக்க வேண்டும். பின், மூச்சை நன்றாக உள்ளிழுத்து, வெளியே விடும்போது, கைகளால், காலை மேலும் இறுக்கமாகப் பிடிக்க வேண்டும். இதையே இடது காலைத் தூக்கியும் செய்ய வேண்டும். இதை 3-5 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: இடுப்பு எலும்புகளின் வளைவுத்தன்மை அதிகரிக்கிறது. வயிற்றுப்பகுதியை இறுக்கிப் பிடிப்பதால், வயிறு இறுக்கமாகிறது.