இடுப்பு வலி இருக்கும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்
இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர். ஆனால் கீழ் இடுப்பு வலி இருப்பவர்கள் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
இன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.
இவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…
இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.
* உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
* உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.
* ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.
* அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.
* மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.
* நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.
* வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.