உறவுகள்புதியவை

தாம்பத்திய உறவு மேம்பட உதவும் கற்றாழை!

கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களைத் தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில் தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திற்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறு கற்றாழை மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது.
சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச்சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்நீரில் 7 – 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும்.
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதை சேகரித்து வைத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் கூட கற்றாழைச்சாறு பயன்படும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker