உலக நடப்புகள்

ரயில்ல போகும் போது இத கவனிச்சிருக்கீங்களா?

ஒவ்வொரு நாளும் விடை தெரியாத கேள்விகள் பலவற்றை கடந்து வருவோம் அன்றாட வாழ்வில் கடந்து வந்திருக்க வேண்டிய விஷயங்களில் கேள்வியெழுப்பாமலேயே அது அப்படித்தான் காலங்காலமாக இப்படியே தான் இருக்கிறது அதையே நாங்களும் தொடர்கிறோம் என்று சொல்லி வந்திருப்போம்.

அப்படி காலங்காலமாக தொடர்கிற சந்தேக கேள்வியை கூட எழுப்ப முடியாத அளவிற்கு பழகிவிட்டிருக்கிற விஷயமும் அதற்கான மூலக்காரணத்தை பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம். பயணங்கள் பெருகி விட்டிருக்கிற அதுவும் நம் அன்றட வாழ்க்கையில் இரண்டரக் கலந்து விட்டிருக்கிற பயணங்களைப் பற்றி தான் இன்றைக்கு சில சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்து கொள்ளப் போகிறோம்.



சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அடுத்த கட்டமாக நெடுந்தூரப் பயணங்களுக்கு நாம் பயன்படுத்தியது ரயில்கள் தான். வளைந்து நெளிந்து இணை பிரியாமல் ஓடுகின்ற தண்டவாளத்தின் மேல் தடக் தடக்…. என்ற சத்தத்துடன் ஓடுகின்ற ரயில் மேல் ஓரு ஈர்ப்பு உண்டு. சரி, இந்த தண்டவாளத்தில் ஏன் கருங்கற்கள் போடப்படுகிறது என்று தெரியுமா?

இரண்டு பாலத்திற்கு நடுவே அவற்றின் வெளியே என சுற்றிலும் போடப்பட்டிருக்குமே….

சரி, ரயிலை விடுங்கள் விமானம்……… பெரும்பாலான விமானங்களுக்கு வெள்ளை நிறத்துடனே இருக்கிறதே ஏனென்று யோசித்திருக்கிறீர்களா? பிற நிறங்களில் எழுத்துக்களோ அல்லது ஏதாவது டிசைன்,லோகோ ஆகியவை இடம்பெற்றிருந்தாலும் பிரதானமான நிறமாக வெள்ளை நிறம் தானே இருந்திருக்கிறது. ஏன், இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

#1 வெள்ளை நிறமென்பது சூரியனின் ஒளியை பிரதிபளிக்ககூடிய ஓர் நிறமாகும். அதை விட தன் மேல் எந்த நிற ஒளி விழுந்தாலும் அவற்றை வெள்ளை நிறம் பிரதிபளிக்கும். ஆனால் வெள்ளை நிறத்தினை தவிர பிற நிறங்கள், தன் மேல் விழுகின்ற ஒளியினை கிரகதித்துக் கொள்ளும் ஆற்றலுடையது.



#2 இப்போது வெள்ளை நிறத்தினை தாண்டி பிற நிறத்தில் ஒரு விமானத்தை பெயிண்ட் அடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படிச் செய்வதினால் விமானம் பறக்கும் போது சூரியனிடமிருந்து வாங்கும் வெப்பமான கதிர்களை பிரதிபலிக்காமல் தனக்குள்ளேயே கிரகித்துக் கொண்டு வெப்பத்தை அதிகப்படுத்தும்.

#3 இது விமானம் பறப்பதையே சீர்குலைக்கும். பறக்கும் போதுமட்டுமல்ல ரன் வேயில் நிறுத்தியிருக்கும் போதும் அதிக வெப்பத்துடனேயே இருக்ககூடாது ஏனென்றால் அது இயந்திரங்களை பெரிதும் பாதிக்கும்.

#4 தரையிலிருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கிறது. லேசாக கவனக்குறைவாக சிறு பிழை நடந்தாலும் அது விமானத்தில் பறக்கிற அத்தனை பேரின் உயிரை காவு வாங்கிடும். ஆக, விமானத்தை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். விமானம் பறக்க தயார்படுத்துவதற்கு முன்னால் மிகவும் கவனமாக பரிசோதிக்கப்படும். விமானத்தின் எந்த மூளையிலாவது சின்ன க்ராக் அல்லது பெயர்ந்து விழும் வகையில் ஏதேனும் இருக்கிறதா என்று சோதிக்கப்படும்.

#5 வெள்ளை நிறமாக இருந்தால் அதனை நீங்கள் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால் அவை வெள்ளை நிறத்தை விட டார்க் நிறத்தில் இருக்கும் தனியாக தெரிந்து விடும். க்ராக் மட்டுமல்லாமல் எங்கேனும் எண்ணெய் கசிகிறது, தண்ணீர் கசிகிறது என்றால் கூட நாம் கண்டுபிடித்து விடலாம்.

#6 விமானம் பறக்க ஆரம்பித்த நேரத்திலிருந்து அது தரையிறங்கும் நிமிடம் வரையிலும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள் அப்படி கண்காணிக்கும் போது எளிதாக அடையாளப்படுத்த வெள்ளை நிறம் உதவிடுகிறது. அதோடு எங்கேனும் விபத்தாகி விழுந்து விட்டாலும், ரேடார் கருவி மூலமாக பார்க்கையில் வெள்ளை நிறம் தனியாகத் தெரிந்து அது வெளிச்சம் குறைவான பகுதி, தண்ணீரில் விழுந்து விட்டது என்றாலும் வெள்ளை நிறத்தினை எளிதாக கண்டுபிடிக்கலாம்.



#7 மேற்சொன்னவை எல்லாம் அறிவியல் பூர்வமான காரணங்கள், இவற்றை தவிர பிற காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது. அவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்….. விமானத்திற்கு பெயிண்ட் அடிப்பது என்பது ஒரு வேலிக்கோ அல்லது ஒரு வீட்டிற்கோ பெயிண்ட் அடிப்பது போன்ற எளிதான விஷயமல்ல.

#8 பணம்,மனித உழைப்பு மற்றும் நேரம் மூன்றும் இதில் கலந்திருக்கிறது. ஒரு போயிங் விமானத்தை பெயிண்ட் அடிக்க குறைந்தது இரண்டு தினங்களிலிருந்து ஏழு நாட்கள் வரை ஆகிடும். நம்முடைய பட்ஜெட்டை பொறுத்து இது வேறுபடும். அதோடு வெள்ளை நிறத்தினை தவிர்த்து பிற நிறங்களை பயன்படுத்துவதால் அவை விமானத்தின் எடையை அதிகரித்திடும்.

#9 விமானம் பறக்க வேண்டியிருப்பதால் நம்மால் முடிந்த அளவு எடையை குறைக்க வேண்டியது அவசியம். எந்த பொருளை வாங்கினாலும் அதற்கு ரீசேல் வேல்யூ என்னவென்று கவனிக்கப்படுவது உண்டு. ஆக, ஒரு விமானத்தை வெள்ளை நிறத்தினை தவிர பிற வண்ணங்களில் பெயிண்ட் அடித்திருந்தால் அதற்கு ரீசேல் வேல்யூ மிகவும் குறைவாக இருக்கும்.

#10 இங்கே தரையில் நமக்கிறுக்கும் வெப்பநிலை வேறு மேலே ஆகாயத்தில் பறக்கும் போது அதன் வெப்ப நிலை அதன் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கும். பிற நிறங்களை பெயிண்ட் அடிப்பதினால் அது மிக வேகமாக ஃபேட் ஆகிடும். தொடர்ந்து அதனை பராமரிக்க, ரீ பெயிண்டிங் செய்ய வேண்டியதாய் இருக்கும்.

#11 விமானத்தை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம், இப்போது ரயில் பயணம் நாம் தொடர்ந்து கவனித்து வருகிற ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். ரயில் தண்டவாளங்கள் வெகு தூரம் நீண்டு கிடப்பதை பார்த்திருப்போம் அதே நேரம் தண்டவாளங்களுக்கு இடையில் இருக்கிற ஸ்லீப்பர்களை கவனித்திருக்கிறீர்களா?

#12 இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் இருக்கிற சிமெண்ட் மேடையைத் தான் ஸ்லீப்பர் என்கிறார்கள். இதைத் தவிர இதற்கு பல பெயர்களும் இருக்கிறது. இந்த ஸ்லீப்பர் இரண்டு தண்டவாளங்களும் ஒரே இடைவேளியில் தொடர்ந்திட உதவிடுகிறது.

#13 நடுவில் இருக்கும் சிமெண்ட்டினால் மேடை எந்த காரணத்தினாலும் நகரவோ, உடைந்திடவோ கூடாது. இது 24 மணி நேரமும் வெயிலில் இருக்கிறது. வெயில் மழை என எல்லா வகையான வெப்பத்தையும் தாங்கிட வேண்டும். அந்த சிமெண்ட் மேடைக்கு கீழேயிருக்கும் மண் தளர்ந்து அந்த சிமெண்ட் ஸ்லீப்பர் விலகினாலோ அல்லது தளர்ந்தாலோ தண்டவாளம் விலக வாய்ப்புள்ளது.



#14 இது மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்திடும். ஏராளமான உயிர்சேதங்களை ஏற்படுத்தும், அதனால் இந்த சிமெண்ட் ஸ்லீப்பர்களுக்கு மிகுந்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிமெண்ட் ஸ்லீப்பரின் முக்கியத்துவம் சரி, அங்கே பயன்படுத்தப்படுகிற கருங்கற்கள்…..?

#15 சிமிண்ட் ஸ்லீப்பர்களை மிகவும் இறுக்கமாக வைத்திருக்க, அதே நேரத்தில் தண்டவாளங்கள் விலகமால் இருக்க ஸ்லீப்பர்களுக்கு மேலேயும், இடையிலும் கருங்கற்கள் போடப்படுகிறது. குறிப்பாக மண் தரையில் ரயில் தண்டவாளம் அமைத்திருந்தால் தண்டவாளம் அமைத்திருக்கும் இடத்தை தாண்டி சில அடி தூரம் வரையில் கற்களை போட்டு வைத்திருப்பதை கவனிக்கலாம்.

#16 பிற கற்களை சிறிய கற்களோ அல்லது வழுவழுப்பான கற்களை பயன்படுத்தாமல் கடினமான பெரிய பெரிய கருங்கற்களை பயன்படுத்தவும் ஒரு காரணம் இருக்கிறது. ஆயிரக்கணக்கில் எடை கொண்ட ரயில் மிக வேகமாக தண்டவாளத்தில் செல்லும் போது அதன் வேகத்திலும் அழுத்தத்திலும் பிற கற்கள் உடைந்துதிட வாய்ப்புண்டு. சிறிய கற்களாக இருந்தால் இருந்த இடம் தெரியாமல் மண்ணாகும்.பிற வழு வழு கற்கள் என்றால் அவை, ரயில் வருகிற வேகத்தில்,அந்த அதிர்வில் இடம் மாறி விழ வாய்ப்புண்டு. ஒரு இடத்தில் சுத்தமாக கற்கள் இல்லாமல் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கற்கள் குவியவும் வாய்ப்புண்டு. சில சமயங்களில் கற்கள் தண்டவாளத்தில் கூட ஏறிடும்.

#17 ஆக, அளவில் சற்று பெரிதாகவும், கடினமானதாகவும் இருக்க வேண்டும். வழு வழுப்பாக இல்லாமல் கூர்மையாக இருக்க வேண்டும். இதனால் ஒன்றோடு ஒன்று நன்றாக இறுகிக் உட்கார்ந்து கொள்ளும். எவ்வளவு பெரிய அதிர்வு ஏற்பட்டாலும். சரியாக செட் ஆகியிருப்பதால் எளிதாக தானாக தன் இடத்தை மாற்றிக் கொள்ளாது.



#18 இதைத் தவிர தண்ணீர் தேங்கி நின்று தண்டவாளத்தை வழுவிழக்கச் செய்வதும் இதில் தவிர்க்கப்படும்.ரயில் வேகமாக அசையும் போது எழுப்பக்கூடிய கூடுதலான சத்தங்களும் அதிர்வுகளும் கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிகப்படியான கருங்கற்களை நெருக்கமாக ரயில் தண்டவாளங்களில் போடுகிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker