அதிக தண்ணீர் குடிப்பது ஆபத்து
அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உடலின் பெரும்பகுதியில் தண்ணீர்தான் நிரம்பியிருக்கிறது. அதை சார்ந்தே உடல் இயக்கமும் நடைபெறுகிறது. போதுமான அளவில் தண்ணீர் குடிப்பது உடல் இயக்கத்திற்கும், வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவும். கோடைகாலத்தில் அதிக தாகம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதேவேளையில் தாகம் எடுக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.
அளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் அதிகளவில் தண்ணீர் பருகும் போது அது சிறுநீரகத்தையும் சோர்வடையச்செய்யும். உடலில் தேங்கி இருக்கும் அதிக தண்ணீரை சமநிலைப்படுத்துவதற்கு உடல் உறுப்புகள் இயங்கும்போது சோடியத்தின் அளவு குறைந்து போய்விடும். மேலும் மூளையில் வீக்கம் ஏற்படவும் வழிவகுத்துவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 8 டம்ளர் குடிப்பது போதுமானது.