புதியவைமருத்துவம்

இந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை பாருங்க

உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். சில அறிகுறிகளை கீழே குறிப்பிடுகின்றோம். இந்த அறிகுறிகள் இருந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.

பலருக்கும் ஒரு வழக்கம் இருக்கின்றது. ஏதாவது ஒரு உடல் பாதிப்பு அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவர்கள் அதனை பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான் எல்லாவற்றையும் சரியாச் செய்கிறேன். முறையாய் உண்கிறேன். சரியான நேரத்திற்குத் தூங்க சென்று எழுகின்றேன். எனக்கு எந்த பிரச்சினையும் வராது எனத் தீர்மானமாய் இருப்பார்கள். உடல் எடை கூடிக் கொண்டே இருக்கும் அறிகுறிகளை ஒதுக்கி விடுவார்கள். சில அறிகுறிகளைப் பற்றி கீழே குறிப்பிடுகின்றோம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.

* வயிறு உப்பிசமாகவும் சற்று பெரியதாக தோன்றுவதாகவும் பல நேரங்களில் அநேகர் நினைக்கின்றனர். இது எடை குறைவு, வயிற்று பிரட்டல், வாந்தி என்று இருந்தால் அதனைப் பற்றி உடனே மருத்துவ அறிவுரை பெற வேண்டும். பொதுவில் சில சத்தான உணவுகள், முளைகட்டிய பயறுகள், (உம்:) பீன்ஸ், முட்டைகோஸ், காரட் போன்றவைகளும், லக்டோஸ் அதிகமுள்ள உணவுகள், சில பால் வகை, சர்க்கரை, அதிக நார் சத்து பழம், கூழ் இவையும் உப்பிச வயிறு பெருத்த உணர்வினை தோற்றுவிக்கும்.

மேலும் அதிக மலச்சிக்கல், பயணம், வேலை பளு இவையும் இந்த பாதிப்பினை எற்படுத்தலாம். உடற்பயிற்சி இன்மையும் உப்பிச பாதிப்பினை ஏற்படுத்தலாம். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளாலும் உப்பிசம் ஏற்படலாம். வெகு அரிதாக இது உணவுப் பாதை புற்று நோயின் காரணமாகவும் இருக்கலாம்.

* உணவில் உப்பினை சற்று குறைத்துக் கொள்ளுதல்
* உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுதல்
* மோர், கொழுப்பில்லாத தயிர் சேர்த்துக் கொள்ளுதல்
* யோகா பயிற்சி.
* வாழைப்பழம் அன்றாடம் எடுத்துக் கொள்ளுதல்
* எலுமிச்சையை தண்ணீரில் கலந்து அருந்துதல்
போன்றவை உப்பிசத்திற்கு நிவாரணமாக அமையும்.

குறட்டை – இது அருகில் இருப்பவரை தூங்க விடாது அதிக தொந்தரவு செய்து விடும். குறட்டையின் காரணமாக விவாகரத்து வரை சென்றவர்கள் கூட உண்டு. ஆனால் குறட்டை உடலில் ஏதோ ஒரு பாதிப்பினை உணர்த்துவதாக இருக்கலாம். ஆக இதனை கேலி, தமாஷ் என்று நினைக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

அதிக காற்று வெளியே போகுதல் – இது அஜீரணக் கோளாறின் வெளிப்பாடு. உணவு அலர்ஜி இருக்கலாம். குடல் பிரச்சினை இருக்கலாம். அதிக ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு வயிறு அதிகம் குலுங்குவதுடன் அதிக காற்றினையும் இவர்கள் விழுங்கி விடுகின்றனர். உண்ணும் பொழுதும், நீர், காபி போன்றவை குடிக்கும் பொழுதும், அதிக மூச்சு வாங்கும் பொழுதும் அதிக காற்றினை விழுங்கி விடுகின்றனர். மேலும்

* இருமல் தொல்லை ஏற்படும் பொழுது அதிக காற்றினை விழுங்கிவிடுவர்.
* இருமல் மருந்தில் உள்ள செயற்கை இனிப்பு கட்டியினால் வயிற்றில் காற்று ஏற்படலாம்.
* தூங்கும் நேரம் மாறுபடும் பொழுது குடலில் நீர் தங்கி காற்று உருவாகலாம்.

* கிருமி தாக்குதல், சிறு நீரக கிருமி, சிறுநீர் குழாயில் கிருமி போன்றவையும் வயிற்றில் அசவுகரியத்தை உண்டாக்கலாம். மேலும் இதற்காகத் தரப்படும் ஆன்டி பயாடிக்குகளாலும் வயிற்றில் காற்று உண்டாகலாம். இதற்கு மருத்துவரே உதவுவார்.

* சிலருக்கு அன்றாடம் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். இவர்களுக்கு சில நேரங்களில் மேல் வயிறு வலி. காற்று இவற்றில் பாதிப்பு இருக்கும். உங்கள் மருத்துவர் உங்களுக்கு தேவையான அளவு ஆஸ்பிரினை சிபாரிசு செய்வதுடன் அதனை உணவிற்குப் பிறகே எடுத்துக் கொள்ளச் சொல்வார். மேலும் மருந்துகளை விழுங்கும் பொழுது தேவையான அளவு நீரினை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு நீரில் விழுங்கும் பொழுது அது உணவுப்பாதை சுவரில் பாதிப்பினை ஏற்படுத்தும்

* அதிக மன உளைச்சல் அஜீரண பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் காற்று பாதிப்பு ஏற்படலாம். மேலும் படபடப்புடன் இருக்கும் நேரத்தில் நாம் அறியாமலே அதிக காற்றினை விழுங்கி விடுகின்றோம். இதனாலும் அதிக காற்று வெளிப்போக்கு ஏற்படலாம்.

* மீந்துபோன உணவுகளை அதிகம் மறு சூடு செய்து உபயோகித்தால் வயிற்றில் காற்று சேரும்.

ராஜ்மா, பீன்ஸ்,முட்டைகோஸ், காலிபிளவர், வெங்காயம், பழங்கள் இவற்றினை அதிக அளவில் உண்ணும் பொழுது வயிற்றில் காற்று சேரலாம்.
எப்பொழுதும் சோர்வாகவே இருக்கின்றீர்களா? நான் நன்கு தூங்குகிறேன். இருந்தாலும் சோர்வாகவே இருக்கின்றேனே என்று சொல்கிறீர்களா? சோர்வு பல உடல் ஆரோக்கிய பாதிப்புகளின் வெளிப்பாடே.

* ரத்தசோகை இருக்கலாம்.
* தைராய்டு ஹார்மோன் பாதிப்பு இருக்கலாம்.
* நீரிழிவு நோய் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம்.
* மனச்சோர்வு, மன உளைச்சல் காரணமாக இருக்கலாம்.
* உணவு ஒவ்வாமை இருக்கலாம்.
* அட்ரினல் ஹார்மோன் பாதிப்பு இருக்கலாம்.

• இருதய பாதிப்பு இருக்கலாம். ஆக மருத்துவ பரிசோதனையே இதற்கு எளிய தீர்வு. வாய் துர்நாற்றம்: வாய் துர்நாற்றம் பற்றி அநேகர் கண்டு கொள்வதேயில்லை. அருகில் இருப்பவர்களுக்கு இது பெரும் அவஸ்தை என்றாலும் பாதிப்புடையவருக்கு உடல்நல பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதால் இதற்கும் கவனம் கொடுக்க வேண்டும்.

• வாய் சுகாதாரமின்மை முக்கிய காரணமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
• தேவையான அளவு நீர் குடிக்க வேண்டியது அவசியம்.
• வாயில் உணவுப் பொருள் தங்காமல் வாயின் சுத்தம் செய்ய வேண்டும்.
• சாக்லேட் மற்ற இனிப்புகளை அடிக்கடி வாயில் போட்டு சுவைக்கக்கூடாது.

• வாய் துர்நாற்றம் கல்லீரல், சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
• தொண்டையில் சதை வீக்கம் காரணமாய் இருக்கலாம்.
• வயிற்றில் புண் இருக்கலாம்.
• உங்கள் எடை அதிகமாக இருக்கலாம்.

• நீங்கள் கொழுப்பு குறைவான தயிர், மோர் குடிக்க வேண்டி இருக்கலாம்.
• முறையாய் பல் துலக்க வேண்டிய அவசியம் இருக்கலாம்.

அடிக்கடி தலைவலியால் அவதிபடுகின்றீர்களா?

தலைவலி சில நேரங்களில் வருவது சாதாரண நிகழ்வு தான். ஆனால் அடிக்கடி தலைவலி வருவதும், தாங்க முடியாத அளவு ஏற்படுவதும் உடனடி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மற்றபடி சாதாரண தலைவலியினைத் தவிர்க்க

• தேவையான அளவு நீர் குடியுங்கள்.
• முறையான நேரத்தில் உண்ணுங்கள்.
* அதிக வாசனை திரவியங்களைத் தவிருங்கள்.
* ஒரே இடத்தில் அமர்ந்து இராமல் அடிக்கடி நடங்கள்.

* 8 மணி நேரம் தூங்குங்கள்.
* வாழ்க்கையை கம்ப்யூட்டர் முன்பும், செல்போன் முன்பும் செலவழிக்காதீர்கள்.
* புகை, மது இரண்டினையும் நிறுத்துங்கள்.
* அதிக எடை இருப்பின் குறையுங்கள்.

* உங்கள் மருந்துகள் உங்களுக்கு ஒத்துக் கொள்கின்றதா என்று செக் செய்யுங்கள்.
* அலர்ஜி தரும் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
* அளவான உப்பினை எடுத்துக் கொள்ளுங்கள்.

* சிலருக்கு திடீரென நடக்கும் பொழுதும், எழுந்திருக்கும் பொழுதும் சதை பிடிப்பு ஏற்படும். இது உடலில் சில சத்து குறைபாடுகளை குறிக்கும். உடற்பயிற்சிக்குப் பிறகும் இவ்வாறு ஏற்படலாம். உடலில் நீர் குறைதல், கோணல் மாணலாக படுத்து உறங்குவதாலும் ஏற்படலாம். உடலில் சத்து குறைபாடுகள் இருக்கின்றதா என்று அறிந்து நீக்கி விட வேண்டும்.

அலர்ஜி: எதனால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை முழுமையாய் மருத்துவ ஆய்வின் மூலம் அரிந்து அதனை முறையாய் பின்பற்ற வேண்டும். எடை குறைவோ, எடை கூடுதலோ உங்கள் முயற்சி இன்றி ஏற்பட்டால் அதனை உடனடி கவனிக்கவும்.

ஆக உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்சினைகளை தவிர்த்து விடலாம் என்பதனை அறிந்து செயல்படுவோமாக.
அக்னி நட்சத்திர தாக்குதல் காலம் முடிந்து விட்டாலும் வெயிலின் சுட்டெரிப்பு இன்னமும் தணியவில்லை. ஆகவே அனைவரும் அனைத்து வெயில் கால பாதுகாப்புகளையும் சிறிது காலம் தொடரவே வேண்டும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker