பண்டைய காலத்தில் இருந்தே உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதால் தான் பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். (healthy men body fit tips) சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு தேவையான ஆண்மையை அதிகரிக்கக் கூடிய சக்தி கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காலை உணவுக்குப் பின் சிறிதுநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். இந்த நாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடக்கூடாது.
ஆண்கள் ஆண்மை அதிகரிக்க வாழைப்பழம் சிறந்த உணவாகும். இதில் உள்ள பொட்டாசியம், பி வைட்டமின் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும். அதேபோல் ஆவகேடோ எனப்படும் வெண்ணெய் பழம் சக்தி தரக்கூடியது. இதில் உள்ள பி6 வைட்டமின் பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தாலும் போக்கும்.
மீன் வகைகளில் எது கிடைக்கிறதோ அவற்றை எல்லாமே வாங்கிச் சாப்பிடலாம். கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரியாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும்.
இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். முட்டையில் வைட்டமின்கள் பி6, பி5 உள்ளது. இது மனஅழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்யும். பச்சை முட்டையை சாப்பிட சக்தி அதிகரிக்கும். ஆண்களுக்கு கிளர்ச்சி ஏற்படும்.
எனவே இரண்டு நாட்டுக்கோழி முட்டைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டு பின் பால் அருந்தி வரவும். இப்படி 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழுபலன் கிடைக்கும்.