புருவம் காக்க வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகள்
நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். புருவம் அழகாக, நேர்த்தியாக வளர உங்களுக்கான சில இயற்கை வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும்… வேறு சிலருக்கு திடீரென்று அவற்றில் இருக்கும் முடி உதிர ஆரம்பித்து வயிற்றில் புளியைக் கரைக்கும்.. புருவத்தை காக்க வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
* விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்துவரவும். விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
* இதைத் தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பைத் தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம் (Lauric acid) புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.
* இதை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்துக் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதைச் செய்துவந்தால் முடி வளரும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ஏ உடம்பில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெயை (Sebum) அதிகரிக்கும்.
* தூங்குவதற்கு முன்னர் இதைத் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ முடி வளர உதவும்.
* கற்றாழை ஜெல்லைத் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது விரைவில் முடி வளர உதவும்.
* ஒரு வெங்காயத்தைச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து தேய்த்துவந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் சல்ஃபர் முடி உதிர்வைத் தடுக்கும்.
* இதைப் புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் பயோட்டின் முடி வளர உதவும்.
* பாலைப் பஞ்சால் தொட்டுத் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதைத் தொடர்ந்து செய்துவர புருவ முடி சீராக வளரும்.
* செம்பருத்தி இலையை அரைத்து, புருவங்களில் தேய்த்துவர புருவ முடி வளரும்.