உறவுகள்புதியவை

பெண்களுக்கு தாய்மையடைந்ததும் செக்ஸில் விருப்பம் குறைய என்ன காரணம்?

திருமணத்திற்கு பிறகு ஆணும் பெண்ணும் நெருங்கி பழகும் போது, அந்த உறவில் சில மாற்றங்கள் உருவாகிறது. அவற்றுள் சில மாற்றங்கள் இருவருக்கும் நன்மை தரும். (mother avoid sex) சில மாற்றங்கள் ஒருவருக்கு நன்மையையும் மற்றவருக்கு அசௌகரியத்தையும் உண்டாக்கும்.

யுகே வில் இருக்கும் யூனிவர்சிட்டி ஆப் சௌதம்ப்டன் என்ற ஓர் பல்கலைக்கழகத்தில், நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது மற்றும் எவ்வளவு காலமாக சேர்ந்து வாழ்கின்றனர் ஆகியவை பாலியல் விருப்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

காலப்போக்கில் ஆண் – பெண் இருவருக்கும் பாலியல் உணர்வில் ஆர்வம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பின்னடைவு, உணர்ச்சிகளின் குறைபாடு போன்றவை பாலியல் ஆர்வத்தை படிப்படியாக குறைக்கின்றன.

குறிப்பாக திருமணத்திற்கு 1 வருடத்திற்கு பின் பெண்களுக்கு பாலியல் என்ணம் குறைகிறது என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் – பெண் உறவு திருமணத்திற்கு பின் சில வருடங்களில் காதல் மறைந்து அன்பு மட்டுமே இருப்பதால் இந்த பாலியல் பின்னடைவு ஏற்படுவதாக ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.பெண்கள் தாய்மை அடைவதால் அவர்கள் பொறுப்பு அதிகரிக்கப்படும், இதனால் பாலியல் உணர்வு குறைகிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் அதிக வேலையால் ஏற்படும் சோர்வு மற்றும் அழுத்தம் பெண்களை பாதிக்கிறது. ஆண்களுக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படாததால் அவர்களின் பாலியல் உணர்வு மேலோங்கி காணப்படும்.

பிரசவத்திற்கு 3 மாதம் கழித்து 20% பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைவதாக கூறப்படுகிறது. 21% பெண்கள் முற்றிலும் பாலியல் ஆர்வத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. பாலியல் ஈடுபாட்டில் ஒருவித சலிப்பு தோன்றுவதாக பெண்கள் கூறுகின்றனர். அவர்களின் பொறுப்புகளுக்கு முன் பாலியல் உணர்வு கடைசி இடத்தை பிடிக்கிறது.

16-74 வயதிற்கு இடையில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 34% பெண்கள் பாலியல் உணர்வில் விருப்பம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் 15% பேர் தான் . 5ல் 2 பெண்கள் பாலியல் வாழ்வில் அதிருப்தியை உணர்கின்றனர். இதற்கு காரணம், அவர்களின் மன அழுத்தம், வேலை, மற்றும் குடும்பத்தினரால் ஏற்படும் அழுத்தம் போன்றவை .

கால மாற்றத்தாலும், துணைவருடன் மனம் திறந்து பேசுவது குறைவதாலும், பெண்களுக்கு பாலியல் உணர்வு குறைந்துள்ளதாக தெரியப்படுகிறது. இந்த பிரச்சினை சிகிச்சைக்கு அப்பாற்பட்டது. மருந்துகள் இவற்றை சரி செய்வது இயலாத காரியம்.

மனம் திறந்து பேசுவதாலும், நெருக்கமாக இருப்பதாலும் இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும். பெண்களின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளுங்கள் . ஒன்றாக வெளியில் சென்று வருவதால், ஒன்றாக சமைப்பதால், ஒன்றாக இசையை இரசிப்பதால் காதல் அதிகரிக்கும் . பாலியல் உணர்வு என்பது தவறான மற்றும் அருவருப்பான விஷயம் அல்ல. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் உலக நியதி. அன்பால் , காதலால் இணைந்திருங்கள்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker