முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் உப்பு
சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அவர்கள் உப்பை கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருமுறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.
* 1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கலந்து வைத்துள்ள கலவையைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
* தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனில், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைக் காணலாம்.