உறவுகள்புதியவை

ஆண்மைக்குறைவை போக்கும் செண்பகப்பூ

மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கிக் குவிந்த இலை, நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது.

இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் பல சிவன் கோயில்களில் செண்பக மரம் தல விருட்சமாக வளர்க்கப்படுகின்றது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் செண்பக மரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இலைகள் நீண்டு வளரக்கூடியவை. இலைகளின் மேற்புறம் பசுமையாகவும் பின்புறம் ரோமங்கள் நிறைந்திருப்பதாலும் காற்றில் கலந்திருக்கும் தூசுகளை அகற்றும் தன்மை படைத்தவை. மஞ்சள் நிற மலர்களின் வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதோடு ரம்மியமான ஒரு சூழலை உருவாக்கும். இதைச் சுவாசிப்பதன்மூலம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.


0 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த மரங்களில் பூக்கள்தான் சிறப்பு. ஆகவே மலருக்காக வீடுகள் மற்றும் கோயில் நந்தவனங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் இலை, பூ, விதை, வேர். பட்டை ஆகியவற்றுக்கு மருத்துவக்குணங்கள் உள்ளன.

செண்பக மரத்தின் இலைகளைத் தேநீராக்கி குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். மேலும் பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். செண்பக இலைகளைக் கொண்டு பசியின்மை, வயிற்றுவலி, மாதவிலக்குப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ஓர் எளிய மருந்து தயாரிக்கலாம். செண்பக இலைகளைத் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். அதில் 2 ஸ்பூன் அளவு சாறு எடுத்து ஒரு துண்டு லவங்கப்பட்டைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள், வயிற்றுவலி, வயிற்றுப்புண் சரியாகும்.

செண்பகப் பூக்கள் தூக்கத்தைத் தரக்கூடியவை. தூக்கமின்மை மற்றும் மன உளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு எளிய மருந்து தயாரிக்கலாம். இரண்டு செண்பகப் பூக்களுடன் அரை டீஸ்பூன் கசகசா, அரை டீஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பால் சேர்த்து வடிகட்டி இரவு தூங்கப்போகும் முன் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு தூக்கம் வரும். இதைத்தொடர்ந்து மன அழுத்தம் நீங்கும். அத்துடன் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்துவதோடு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

செண்பகப் பூ வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது. செண்பகப் பூக்களை அரைத்து பசையாக எடுத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதை வலி, வீக்கம், கைகால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் தலைவலிக்குப் பூசி வந்தால் பலன் கிடைக்கும்.

செண்பகப் பூவை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் ஆண்மைக்குறைவு நீங்குவதோடு காய்ச்சல் குணமாகும். இந்தக் கஷாயம் சிறுநீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தும். செண்பகப் பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல், தலைவலி, கண் நோய்கள் குணமாகும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker