தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை
குழந்தைகளுக்கு எவ்வாறான உடை அணிவிக்க வேண்டும்?
பிஞ்சுக் குழந்தைகளின் உடை பஞ்சுபோல் மிருதுவாக இருக்க வேண்டும். டிசைன், கலர், அழகு என்பதை மட்டும் பார்க்காமல், உடலை வதைக்காத பருத்தி ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ஒரு மாதக் குழந்தைக்கும் இப்போது பாவாடை, சட்டை வந்துவிட்டது. இவற்றைப் போட்டுப் அழகுபார்ப்பது, குழந்தைக்கு இம்சையை ஏற்படுத்தலாம். உடைகளால் ஏற்படும் அசௌகரியங்களைக் குழந்தையால் வெளியில் சொல்ல முடியாது.
வெயில்காலத்தில் பருத்தியால் ஆன உடைகளே குழந்தைகளின் உடலுக்குப் பாதுகாப்பு.
மிகவும் இறுக்கமான ஆடைகள் அணிவிப்பதை முடிந்தமட்டும் தவிர்த்துவிடுங்கள்.
அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதால், எளிதில் கழற்றி மாற்ற க்கூடிய உடைகளை வாங்குங்கள்.