கேரட் தினசரி தாம்பத்தியத்துக்கு உரம் அளிக்கும் ஓர் நல்ல உணவு. கேரட்டை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவது, எனர்ஜியை அதிகரிக்கும். ஏனென்றால் இதில் எண்ணற்ற அளவில் வைட்டமின்களானது நிறைந்துள்ளது.
மேலும் வேக வைத்த முட்டையுடன் கரட் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை பலம் மேலும் அதிகரிக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்கள் தினமும் உணவில் தவறாமல் கரட்டை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை கரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால் தினமும் ஒரு கரட்டை சாப்பிட்டு வரலாம்.
குழந்தை இல்லை என்றால் பெண்ணிடம்தான் பிரச்சினை இருக்கும் என்கிற தவறான நம்பிக்கை இன்னும் குறைந்தபாடாக இல்லை. ஆணிடமும் அந்த குறைபாடு இருக்கலாம். ஆணின் விந்து பலம் இல்லாமல் இருப்பதும் இந்தப் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம்.
இதற்கான சிகிச்சையோடு, ஆண்களுக்கு உரமூட்டும் உணவுகள் சில இருக்கின்றன. அதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்களின் விந்தணு முழுமையான சக்தி பெறும். கருவுறுவதில் பிரச்சினை என்றால் நாளாக நாளாக தம்பதியரிடம் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். விளைவாக குழப்பமான வாழ்க்கைமுறை, மனஉளைச்சல் எல்லாம் உண்டாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் கணவன், மனைவி இருவருமே தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் நல்ல தீர்வைத் தரும். ஆணுக்கு பிரச்சினை எனும்பட்சத்தில், சிகிச்சையோடு நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சிலவற்றை சேர்த்துக்கொள்வதும் விந்து பலப்பட உதவும்.
உணவு மட்டுமே ஆண் தன்மைக்கு பலம் சேர்த்து, குழந்தைப்பேறு உண்டாகக் காரணமாகிவிடாதுதான். ஆனால் பொருத்தமான உணவை சேர்த்துக்கொள்வது விந்தணுவை முழுமையடையச் செய்யும்.