ஆணுறை பயன்படுத்தினால் கருத்தரிப்பை தவிர்த்து விடலாம் என்பது நூறு சதவித உண்மை கிடையாது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது கடின உராய்வுகளால் ஆணுறையில் கிழிசல் ஏற்பட்டாலோ, காலாவதியான, தரமற்ற ஆணுறை பயன்படுத்தினாலோ கருத்தரிப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு.
தரமான ஆணுறையாகவே இருப்பினும், அதை சரியாக அணிய தெரியவில்லை எனிலும் நீங்கள் பக்கவிளைவுகளை அனுபவிக்க கூடும். எனவே, ஆணுறை சார்ந்த இந்த தவறுகள் இனிமேல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதர பொருட்களுக்கு காலாவதி நாள் இருப்பது போலவே ஆணுறைக்கும் காலாவதி நாள் இருக்கிறது. எனவே, காலாவதி நாளை தாண்டிய அல்லது காலாவதி நாளை நெருங்கும் ஆணுறைகளை பயன்படுத்த வேண்டாம். இதனால், எளிதாக கிழிசல் ஏற்படலாம், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
சரியாக ஆணுறை அணியாமல் அல்லது தரமற்ற, காலாவதியான ஆணுறைகளை பயன்படுத்தினால் கருத்தரித்தல், நோய் (பால்வினை) தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, சரியாக அணியவும், தரமான ஆணுறை பயன்படுத்துவும் கற்றுக் கொள்ளுங்கள்.
சிலருக்கு லேடக்ஸ் ஆணுறைகள் பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். லேடக்ஸ் என்பது ரப்பர் போன்ற பொருளாகும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம், வீக்கம், தும்மல் போன்றவை கூட ஏற்படலாம்.
லேடக்ஸ் ஆணுறை தவிர்த்து, இயற்கையான தோல்களின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆணுறைகள், சின்தடிக் ரப்பரில் தயாரிக்கப்படும் ஆணுறைகளும் இருக்கின்றன. இவர் அலர்ஜிகளில் இருந்து பாதுகாக்கும். அதிக இன்பம் பெற உதவும்.