புதியவைமருத்துவம்

இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது.

அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி வயது 51. ஆய்வில் சேர்ந்த போது அவர்களுக்கு இதய நோய் ஏதும் இல்லை.

ஒட்டுமொத்தமாக அவர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு அரை முட்டை சாப்பிட்டனர். சுமார் 9 வீதம் முட்டை சாப்பிடாதவர்கள்,13 வீதத்தினர் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு முட்டை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள்.ஆய்வில் கலந்து கொண்டவர்களில் குறைந்தது பாதிப் பேர் 9 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். அந்தக் காலக்கட்டத்தில் 83,977 பேருக்கு இதய நோய் அல்லது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டது. அவற்றால் 9,985 பேர் உயிரிழந்தனர்.

முட்டை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது நாளுக்கு சராசரியாக 0.76 முட்டை சாப்பிடுவோருக்கு அந்த நோய்கள் ஏற்படும் அபாயம் 11 வீதம் குறைவு என்று கண்டறியப்பட்டது.

அவற்றால் அவர்கள் மரணமடையும் அபாயம் 18 வீதம் குறைவு.

முட்டைகளில் பல வைட்டமின்கள், உயர்தரப் புரதச் சத்து, உணவில் தேவைப்படும் கொழுப்புச் சத்து ஆகியவை இருப்பதாக ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடுவதால் இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறித்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கவில்லை என்று ஆய்வில் பங்கேற்காத மற்ற சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதல்ல என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker