சமையல் குறிப்புகள்புதியவை
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப்
தேவையான பொருட்கள் :
எலுமிச்சைச் சாறு – கால் கப்,
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு,
வெங்காயம் – ஒன்று.
எலுமிச்சை தோல் – சிறிதளவு,
காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு கப்,
உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் – தேவைக்கு.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம்.
புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி.