புதியவைமருத்துவம்

அம்மாக்களும் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்

குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

அம்மாக்களுக்கு அழகும் அவசியம். ஆரோக்கியமும் அவசியம். குடும்பத்தை தூக்கி சுமக்கும் அம்மாக்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். கழுத்தைப் பிடிக்கிற அளவுக்கு குடும்ப பொறுப்புகளும் இருக்கவே செய்யும். ஆனாலும் அவர்கள் அழகு, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் அம்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். அம்மாக்களுக்கான சில அழகான ஆலோசனைகள்!

தினமும் காலையில் எழுந்ததும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவருக்கும், குழந்தைகளுக்குமான மதிய உணவு தயார் செய்வதில்தான் முழு கவனமும் இருக்கும். அதுவே மன நெருக்கடிக்கும் உள்ளாக்கும். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் அவசரகதியில் கிளம்பும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும். அதனால் முன்தினம் இரவே மறுநாளுக்காக திட்டமிடவேண்டும். ‘நாளை என்ன சமைக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மாதிரி அலங்காரம் செய்ய வேண்டும்’ என்று திட்டமிட 10 நிமிடங்கள் செலவிட்டால் போதும். இது காலை நேர பரபரப்பை குறைக்கும். அவசரத்தில் முக்கியமான விஷயங்களை தவறவிடுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

இரவில் எல்லா வேலை களையும் முடித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் அவசர குளியல் போடலாம். மனதை வருடும் இசை தொகுப்புகளை ரசித்து கேட்டபடி தூங்க செல்லலாம். இவை பெண்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். மறுநாள் உற்சாகத்துடன் இயங்கவும் உதவி புரியும்.

கூந்தலை இறுக்கமாக பின்னியிருந்தால், தூங்க செல்வதற்கு முன்னால் அதை தளர்வாக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் காலையில் எழுந்திருக்கும்போது கூந்தல் சிக்காகுவதை தவிர்த்துவிடலாம். விரைவாக கூந்தல் அலங்காரத்தை முடித்துவிடலாம். சிகை அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இல்லாவிட்டால் அதற்கான லோஷனை சிறிதளவு கூந்தலில் தடவினால், அலங்காரத்தை விரைவாக முடித்துவிடலாம். தூக்கமின்ைமயால் அவதிப் படுபவர்களின் கண்களை சுற்றி கருவளையத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். ‘ஐ லைனர்’ உபயோகித்து அவைகளை போக்க முயற்சிக்கலாம்.

பெண்களின் அழகு என்பது அவர்களது ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. ஆரோக்கியத்திற்காக பெண்கள் தினமும் சமச்சீரான சத்துணவை உண்ணவேண்டும். அளவோடு சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சியும் மேற்கொள்ளவேண்டும். நல்ல தூக்கமும், மன அமைதியும் மிக அவசியம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker