சுகாசனம் என்னும் பிராணாயாம பயிற்சி
இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
ஆசனப் பயிற்சிகளை முடித்த பிறகு தியான ஆசனத்தில் அமர்ந்து இரண்டொரு நிமிடங்கள் ஓய்வு பெறவும். பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரை இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
பெயர் விளக்கம் : ‘சுக’ என்றால் அனுகூலமான துன்பமில்லாத என்று பொருள். ஆசனம் என்றால் இருக்கை. இந்த ஆசனத்தில் அமர்வது சுலபமாகவும் சுகமாகவும் இருப்பதால் சுகாசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை : முதலில் தண்டாசனத்தில் அமரவும் பிறகு இடது, வலது காலை ஒன்றன் பின் ஒன்றாக மடக்கவும். வலது பாதம் இடது தொடையின் கீழும், இடது பாதம் வலது காலின் கீழும் இருக்கட்டும். மார்பை நிமிர்த்தவும். தலை, கழுத்து, முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி முழங்காலின் மேல் வைத்து கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும் சின்முத்திரையைப் பற்றிய விளக்கம் அடுத்து வரும் ஆசனத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக் குறிப்பு : பத்மாசனம், சித்தாசனம், வஜ்ராசனம் போன்ற தியான ஆசனங்களை சில நாட்கள் பழகினால்தான் அதில் நீண்ட நேரம் நிலைத்திருக்க முடியும். ஆனால் இந்த ஆசனத்தை சாதாரணமாக எல்லோரும் செய்யலாம். அதனால் பத்மாசனம், வஜ்ராசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆசனத்தில் அமர்ந்து பிராணயாமம் செய்து பயன் பெறலாம்.
பயன்கள் : தியானம் அல்லது பிராணாயாம பயிற்சி உடலையும், மனதையும் அதிக சிரமமோ, வலியோ இல்லாமல் சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது.