கோடையில் குளுகுளு நுங்கு பலூடா
குழந்தைகளுக்கு அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட கொடுப்பது நல்லது. இந்த சீசனில் கிடைக்கும் நுங்கை வைத்து பலூடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நுங்குத் துண்டுகள் – 10
சப்ஜா விதைகள் – 2 டீஸ்பூன்,
விருப்பமான பழக்கலவை – கால் கப்,
விருப்பமான நட்ஸ் கலவை – 4 டீஸ்பூன்,
பதநீர் – கால் கப்,
நுங்கு புட்டிங் – ஒரு கப்.
செய்முறை :
நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும்.
உயரமான கண்ணாடி டம்பளர்களில் முதலில் சிறிதளவு ஊறிய சப்ஜா விதைகளை சேர்க்கவும். அதன் மீது சிறிதளவு பழக்கலவை சேர்க்கவும். பிறகு பதநீர், நுங்கு புட்டிங்கை சேர்க்கவும். அதன் மீது மீண்டும் பழக் கலவை சிறிதளவு தூவவும். அதன் மீது நுங்குத் துண்டுகள் சேர்க்கவும். இறுதியாக நட்ஸ் வகைகளை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
குளுகுளு நுங்கு பலூடா ரெடி.