வாய்க்கு ருசியான முட்டை பக்கோடா குழம்பு…
முட்டையில் ஆம்லெட், போண்டா, செய்து இருப்பீங்க. ஆனால் இன்று , முட்டையைக் வைத்து பக்கோடா செய்து, அந்த பக்கோடாவை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
முட்டை – 4
உருளைக்கிழங்கு – 2
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான
வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
அரைத்த தக்காளி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு , அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு கரண்டியை கொண்டு கிளறி விட வேண்டும்.
* அடுத்ததாக , ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் முட்டைக் கலவையை ஊற்றி பக்கோடா போன்று, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பக்கோடாக்களாக போட்டுக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காய பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனவுடன் அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி , 1/2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
* கடைசியாக , பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான முட்டை பக்கோடா குளம்பு தயார்.