மனதை மயக்கி பசியை வரவைக்கும் சுவையான இலகுவான ஆட்டுக்கறி…
சுவையான இலகுவான ஆட்டுக்கறி…
தேவையான பொருட்கள் :
* ஆட்டு இறைச்சி – 1/2k
* மல்லித்தூள் – 2 ஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 4
* பெரிய வெங்காயம் நறுக்கியது – 1/2 கப்
* தக்காளி நறுக்கியது – 3
* பூண்டு – 4 பல்
* தேங்காய் துருவல் – 1/2 கப்
* மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
* சோம்பு,சீரகத் தூள் – 1 ஸ்பூன்
* பட்டை/லவங்கம் – 2
* மிளகு – 2 ஸ்பூன்
* புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
* இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
* எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* ஆட்டு இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
* மிளகாய்த்தூள், சீரகம், மிளகு, மல்லித்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் உரித்த சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏழாம், போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள தக்காளி, பெரிய வெங்காயத்தை கொட்டி நன்கு வதக்கவும்.
* வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி, சோம்பு, சீரகப் பொடிகளை சேர்த்து வதக்கவும்.
* பின்னர் புளியை கெட்டியாக கரைத்து தேவையான அளவு ஊற்றி சிறிது உப்பு சேர்த்து சுத்தம் செய்த இறைச்சியை அத்துடன் சேர்க்கவும்.
* தண்ணீர் அதிகம் சேர்க்காமல் குக்கரில் 5 விசில் வைத்து இறக்கவும்.
* மணமணக்கும் ஆட்டுக்கறி தயார்.