பெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது?
கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு.
இந்த வயதில் இல்லை என்றால் குழந்தை பிறக்காதா என நீங்கள் யோசிக்கலாம். அப்படி இல்லை. ஆனால் இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.
அண்மைய சில புள்ளி விவரங்களின்படி 30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்காண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:
பெண் வயதுக்கு வந்தபின், சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.
கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் :
எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பதுதான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18-24மணி நேரத்துக்குள் ஆணின்விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (sperm) சராசரியாக 3–5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.
உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?
உங்கள் முட்டை வெளிவரும்போது, அதாவது ஒவுலஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.
முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்துகொள்வது?
இந்நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
1. பெண்ணுறுப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகிவிடும்.
2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச்சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.
3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4 பாகை F – 0.8 பாகை F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermo meter) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள்.
4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும். உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17 ஆம் நாள்தான் உங்கள்முட்டை வெளியீட்டுநாள். இதுதவிர ovulation testing kits போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறுநீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.