அழகு..அழகு..புதியவை

மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகாக தெரியணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

தற்போதைய காலங்களில் பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். ஒரு சிறிதளவு மேக்கப் இல்லாமல் கூட வீட்டை விட்டு வெளியில் செல்ல தயங்குகின்றனர். அந்த அளவிற்கு அழகின் மீது அவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. உதட்டிற்கு லிப்ஸ்டிக், கண்களுக்கு காஜல் போன்ற அடிப்படை மேக்கப் பொருட்களை தங்கள் கைப்பையில் பலரும் வைத்திருப்பதையே நம்மால் காண முடிகிறது.

மேக்கப் இல்லாத முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்காது என்று நம்மில் பலரும் திடமாக நம்பத் தொடங்கிவிட்டோம் என்பது தான் உண்மை. ஆனால் இது எவ்வளவு ஆபத்தானது என்று பலரும் அறிவதில்லை. மேக்கப் பூசிய முகம் சுவாசிக்க தடுமாறும். ஆகவே மேக்கப் இல்லாமல் உங்களை அழகாக பராமரிக்க சில குறிப்புகள் கீழே இடம் பெற்றுள்ளன. படித்து பயன் பெறுங்கள்.

சன்ஸ்க்ரீன் அவசியம் தேவை

உங்கள் சருமத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் செயல்பாட்டில் அடிப்படை சரும பராமரிப்பு செயல்பாடுகளை மறக்கக் கூடாது. வெளியில் செல்வதற்கு 15 நிமிடம் முன்னதாகவே சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம்.

டிண்ட் மாய்ஸ்ச்சுரைசர்

உங்கள் முகம் சோர்வாக இருப்பதாக கருதினால் மிதமான அளவு டிண்ட் மாய்ஸ்ச்சுரைசர் பயன்படுத்துங்கள். பெரிய பெரிய விழாக்களின் போது உயர்ந்த அளவு பவுண்டேஷன் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

சூடான எலுமிச்சை நீர்

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுங்கள். இதனை தினமும் பின்பற்றுவதால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உடல் தூய்மை அடைகிறது. இதனால் உங்கள் சருமமும் பளபளப்பாக மாறுகிறது.

சருமத்தை ஸ்கரப் செய்ய மறக்க வேண்டாம்

சில நேரங்களில் உங்கள் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இதனால் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது அவசியமாகிறது. இதற்கு ஒரு சிறந்த ஸ்க்ரப் தேவை. சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வதால் சரும துளைக்குள் அடைத்திருக்கும் இறந்த அணுக்கள் வெளியேற்றப்பட்டு சருமத்தில் உள்ள சோர்வு நீக்கப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்றார் போல் வாரத்திற்கு 2-3 முறை சருமத்தை எக்ஸ்போலியேட் செய்யலாம்.

சருமத்திற்கு டோனர் பயன்படுத்துங்கள்

சரும பராமரிப்பின் போது நம் முகத்தை கழுவிய பின் டோனர் பயன்படுத்துவதை பெரும்பாலும் மறந்து விடுகிறோம். முகத்தை சுத்தம் செய்த பின்னர் டோனர் பயன்படுத்துவதால், சருமத்தின் pH அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது.

சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க நீங்கள் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். மேலும் உங்கள் சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் சருமம் எதிர்காலத்தில் சுருக்கம் இன்றி மென்மையாக இருக்க முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker