புதியவைமருத்துவம்

கர்ப்ப கால முதுகுவலிக்கு என்ன செய்ய வேண்டும்

கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.

கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பதால் அவர்களது ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நிற்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் தவிருங்கள்.

இன்னும் சில தவிர்ப்பு முறைகள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான நிலை. முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள். தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
எடை அதிகமான பொருட்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத்தூக்குங்கள்.

முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள். முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது போன்றவற்றை ஆறு மாதங்கள் வரை பின்பற்றுங்கள். முதுகுவலி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பிசியோதெரபியும் சில வகையான உடற்பயிற்சிகளும் உங்களுக்கு உதவலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker