புதியவைமருத்துவம்

கர்ப்ப கால நெஞ்செரிச்சல் – தவிர்க்கும் வழிகள்

அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. எனவே, ஒரேயடியாக சாப்பிடாமல் சின்னச்சின்ன இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டு, பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.

இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது.  நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம் பாதுகாப்பற்றவை.

சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker