ராஜஸ்தான் ஸ்பெஷல் மால்புவா
ராஜஸ்தான் உணவுகளில் மால்புவா இனிப்பு மிகவும் பிரபலம். இன்று இந்த மால்புவாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
ரவை/ சூஜி – 1 கப்
துருவிய பன்னீர் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
எண்ணெய்
பருப்புகள் – 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 டீக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 டீக்கரண்டி</p>
செய்முறை :
பாத்திரம் ஒன்றில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் சர்க்கரைப் பாகினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மாவு வறண்ட பதத்தில் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த இந்த மாவை 4 மணிநேரம் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மாவை பரப்பி ஊற்றவும். கலவையை அதிக தீயில் சுட்டு எடுக்கவும்.
அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறவும்.
சூப்பரான மால்புவா ரெடி.