இளம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம்
‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 – 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சினைப்பையில், நிறைய கருமுட்டைகள், மாதந்தோறும் உருவாகும். அதில், முழு வளர்ச்சி அடைந்த ஒரு முட்டை உடைந்து, ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. கருமுட்டை, குறிப்பிட்ட நாளில் முழுமையான வளர்ச்சி அடைய, இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், முழு வளர்ச்சி அடையாத கருமுட்டைகள், நீர்க்கட்டிகளாகி தங்கிவிடுன்றன.
இதனால், டீன் பருவத்தில், சீரற்ற மாதவிடாய் வருகிறது. ‘ஆண்ட்ரோஜென்’ என்ற ஆண் உடலில் சுரக்கும் ஹார்மோன், பெண்ணின் உடலிலும் சுரக்கும். வழக்கத்தைவிடவும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால், கருமுட்டைகள், முழுமையாக வளர்ச்சி அடைவதைத் தடுக்கும். கருமுட்டை, உடைந்து வெளியில் வருவதிலும் சிக்கல் ஏற்படும். குறிப்பிட்ட இந்த ஹார்மோன் அதிகமாக சுரப்பதற்கு காரணம், இன்சுலின் அளவு அதிகமாக இருப்பது.
தொடர்ந்து, 50 வயதில், பெண்களுக்கு, ‘ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்’ போன்றவை வர வாய்ப்பாகி விடுகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்தப் பிரச்சனையை சரி செய்ய முடியும். உடல் பருமனைக் குறைக்க, முறையான வழிமுறைகளையும், சரியான உணவு பழக்கங்களையும் பின்பற்றுவது முக்கியம்.