மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் கீமா வடை
குழந்தைகளுக்கு பிடித்த சிக்கனில், எத்தனை வகையான உணவுகளை வேண்டுமானாலும் தயார் செய்யலாம். சிக்கன் வடை செய்வது குறித்து இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் கீமா – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பிரட் தூள் -150 கிராம்
முட்டை – 1
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் கீமாவை போட்டு அதனுடன் கரம் மசாலா தூள், இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். ஒரு பிளேட்டில் பிரட் தூளையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் முக்கி பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிக்கன் கீமா வடை ரெடி.