புதியவைமருத்துவம்

கோடையில் உடல் ஆரோக்கியம் காப்போம்

ஆரோக்கிய உணவைத் தேடும் முயற்சியில், ஏற்கனவே நாம் எடுத்துக்கொண்டிருக்கும் உணவு ஆரோக்கியமானதல்ல என்பதற்காகத் திடீரென நிறுத்தக்கூடாது.

ஆரோக்கிய உணவைத் தேடும் முயற்சியில், ஏற்கனவே நாம் எடுத்துக்கொண்டிருக்கும் உணவு ஆரோக்கியமானதல்ல என்பதற்காகத் திடீரென நிறுத்தக்கூடாது. ஆரோக்கிய உணவு என்பதற்காக அதிகமாக ஒரு உணவையும் சாப்பிடக்கூடாது. அதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல!

இன்றைய அவசரமான உடனடித் தேவை இயற்கையில் விளைந்த உணவுப் பொருட்களுக்கு மாறுவதே ஆகும். கடந்த 50 ஆண்டுகளாக, பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள், ஹைபிரிட் விதைகள், பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றால், நிலம், நீர், காற்று எல்லாவற்றையும் மாசுபடுத்தி விட்டோம். இந்த பூமிப்பந்தை நாம் வாழத் தகுதியில்லாத அளவுக்கு மாற்றி விட்டோம். நாம் உண்ணும் உணவே நஞ்சாகிவிட்டது. இதுவே இயற்கை உணவு முறைக்கு மாறத்தக்க தருணத்தையும் தாண்டிப்போய்க் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறி.

பாலும், பால் பொருட்கள்: பாலும், பால் பொருட்களும் மற்ற உணவுகளிலிருந்து வேறுபட்ட குணங்கள் உடையவை.பால்: பசும்பால், அதிலும் நமது மரபுவழி வந்த நாட்டுப் பசுக்களின் பால் நல்லது. பாலைக் காய்ச்சி, ஆடையை எடுத்துவிட்டு, சூடாகவோ, வெதுவெதுப் பாகவோ அருந்துவது நல்லது. பித்த தோஷ வேறுபாட் டால் நோய் வாய்ப்பட்டவர்கள் மட்டும் குளிர்ந்த பாலை அருந்தலாம். பாலின் அருமையான குணங்கள் காரணமாக, பாலைத் தனியாக அருந்துவது நல்லது. உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகள் மற்றும் மீன் ஆகியவற்றுடன் சேர்த்துப் பாலை அருந்தக்கூடாது.

தயிர்: தயிர் செழிப்பான உணவு, ஆனால் அதை உண்பதற்கும் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. கடுமையான வெயில் நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது உஷ்ணத்தன்மையுள்ள உணவு. ஆகவே உடலில் தேவையான ஈரப்பசையை மிகுவிக்கும். குளிர் காலத்தில் மதிய உணவுடன் சாப்பிடலாம்.

ஆனால் நெய், பாசிப்பயறு, பழுப்புச் சர்க்கரை,தேன், நெல்லிக்காய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். இவை தயிரின் சூடாக்கும் தன்மையைக் குறைக்கின்றன. வாழைப்பழம் மற்றும் பிறபழங்களைத் தயிருடன் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து தயிரை அதிகமாக சாப்பிட்டால் சைனஸ், ஆஸ்த்துமா, நீரிழிவு, சிறுநீரக் செயல்பாடு குறைவு, தோல் வியாதிகள் வரும், ஊறுகாயுடன் சாப்பிடுவது தயிரின் தரும் குளிர்ச்சியைக் குறைக்கவே!

மோர் தயிரைவிடச் சிறந்தது. “உண்டி சுருக்கி, மோரைப் பெருக்கி…” என்ற சொல் வழக்கே இதை உணர்த்தும். மோருடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துப் பருகும் போது தாகம் தணியும், தொண்டை கரகரப்பு ஆகியவை வராது. மோருடன் பழைய சோற்றுத் தண்ணீர் சேர்த்து அருந்த வயிற்றுப் புண்கள் சரியாகும். மோர் நாளங்களைச் சுத்தப்படுத்துகிறது. மோர் அதிகம் சாப்பிடுவதால் நூறாண்டுக்கு மேல் (அதிகப்படியான மக்கள்) வாழுமிடங்கள் உலகில் உள்ளன.
ஐஸ்கிரீம்: குளிர்ச்சியுடையது. கபத்தை அதிகரிக் கும், செரிமானத்துக்குக் கடினமானது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் உண்ணக்கூடாது.

வெயில் காலத்தில் உண்ணலாம். இஞ்சி, தேன், மிளகு ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குளிர்ச்சியைக் குறைக்கும், சைனஸ், ஆஸ்த்துமா, சளித்தொல்லை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

இறைச்சி: ஆயுர்வேதம் அசைவத்துக்கு எதிரானது அல்ல. சிலவகை நோய்களுக்கு இறைச்சி பரிந் துரைக்கப்படுகிறது ஆனால் இறைச்சிக்காக வளர்க் கப்படும் விலங்குகள் மரபுபடி வளர்க்கப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இப்போது ஹார்மோன் களைக் கொடுத்து வளர்ச்சியைத் தூண்டுகிறார்கள். அவசியமில்லாமல் தினமும் ஆன்டிபயாடிக் கொடுக் கிறார்கள். பெரும்பாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகராமலே அவை வாழுகின்றன. இவை இயல்புநிலை அல்லவே!

அசைவம் சாப்பிட வேண்டுமானால் ஆட்டிறைச்சியானது கோழி, பன்றி ஆகியவற்றை விட நல்லது. மீன் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் மீன் சாப்பிடலாம். ஆனால் வறுத்த, உப்பிட்ட மீன் சாப்பிடக்கூடாது. மீன் வாதத்துக்கு நல்லது. ஆனால் பித்தம், கபம் இவற்றை அதிகரிக்கும்.

மேலும் அசைவம் சாப்பிடுவதால் நமது உடலின் 5 தோஷங்களின் முன்னேற்றம் தடைபடும். அதனால் நமது ஆன்ம உயர்வும் தடைபடும்!மேலும் ஓர் உயிரைச் கொல்வதும், கொல்வதற்காக வாங்குவதும், விற்பதும் மோசமான கர்மவினையைத் தரும். உணவுக்காகவோ, மனமகிழ்வுக்காகவோ (வேட்டை யாடுதல்) உயிர்க்கொலை புரிவது வன்முறையையும், போர்க்குணத்தையும் மனித மனங்களில் அதிகமாக்கும். எல்லாவற்றிலும் மேலாக நமது கர்மவினைத் தொகுப்பால் மொத்தம் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியைத் தடுக்கும்.

* தண்ணீர் ஆகாரத்திற்குப் பிறகு அருந்துவது: உணவுக்குப்பின் அருந்த, தண்ணீரே மிகச்சிறந்த பானம் ஆகும். தயிர், தேன், பார்லி, கோதுமை போன்ற உஷ்ணம் தரும் பொருட்களை உண்டபின்னும், வெயில் காலம், இலையுதிர் காலங்களிலும் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும். குளிர்காலத்திலும், செரிமானத்துக்குக் கடினமான உணவுகளை உண்ட பின்னும் சுடுநீராக குடிக்க வேண்டும். இ.என்.டி. தொல்லை உடையவர்கள், கபம் உள்ளவர்கள் திரிபலாச் சூரணம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது நல்லது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker