சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகளுக்கு விருப்பமான நுங்கு ரோஸ்மில்க்
தேவையான பொருட்கள் :
இளம் நுங்குச் சுளைகள் – 3,
சர்க்கரை – 3 டீஸ்பூன்,
ரோஸ் சிரப் – 1 டீஸ்பூன்,
பால் – முக்கால் கப்,
சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு – கால் டீஸ்பூன்,
நெய் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ளவும்.
காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது.
– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.