உடலுக்கு சத்து தரும் கேரட் – துளசி சூப்
தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியையும், சக்தியையும் தரும். இன்று தக்காளி, துளசி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் – 1,
வெங்காயம் – 1,
பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
பழுத்த தக்காளி – 300 கிராம்,
சர்க்கரை, மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
துளசி – ஒரு கைப்பிடி,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கேரட், வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.
அடுத்து அதில் நறுக்கிய தக்காளி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, நன்றாகக் குழைய வதக்கவும்.
அடுத்து அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஒன்று சேர்ந்து வெந்ததும் இறக்கி, துளசி சேர்த்துப் பரிமாறவும்.
சூப்பரான தக்காளி – துளசி சூப் ரெடி.