ஆப்பத்திற்கு அருமையான முட்டை குருமா
சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை, இட்லிக்கு சூப்பராக இருக்கும் முட்டை குருமா. இன்று முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை – 6
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
பச்சைமிளகாய் – 8
இஞ்சி பூண்டு விழுது – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால்ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி – தலா 1
கொத்தமல்லி – கால் கப்
வெங்காயம் – 5
எண்ணெய் – ஒரு குழிகரண்டி
கொத்தமல்லி – ஒரு கொத்து
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பூரிக்கு அருமையான முட்டை குருமா ரெடி.
குறிப்பு – கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது சேர்க்க கூடாது.