சமையல் குறிப்புகள்புதியவை
குளுகுளு சப்போட்டா மில்க் ஷேக்
இந்த வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தானது, சுவையானது இந்த சப்போட்டா மில்க் ஷேக். இன்று இந்த மில்க் ஷேக் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ச்சிய பால் – 2 கப்,
நன்கு பழுத்த சப்போட்டா – 4,
பாதாம்பருப்பு – 10,
ஐஸ் கட்டிகள் – தேவைக்கு
சர்க்கரை – தேவைக்கேற்ப.
செய்முறை :
கொதிக்கும் வெந்நீரில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்கி கொள்ளவும்.
சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதையை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய சப்போட்டா பழத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸியில் போடுங்கள்.
அதனுடன் ஊற வைத்த பாதாம், ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
நன்றாக நுரைக்க அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.