தினமும் சிறுநீர் கழிக்கும்போது இதை கவனிக்கத் தவறாதீர்கள்!
நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி.லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும். எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே தோன்றும்.
மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும் கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.
ஒருவரது உடலில் இருந்து கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டால், உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஒருநாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது என்பதை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒருநாளைக்கு சிலர் 6-7 முறை சிறுநீர் கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம். இது அனைத்தும் அவர்கள் எவ்வளவு தண்ணீர் அல்லது பானங்களைக் குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடும்.
சில சமயங்களில் உயர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
இதனால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஒருநாளைக்கு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மிலி சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 400 மி.லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும். மிகுதியாக உள்ள சிறுநீர் உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.
ஆனால் யாருக்கு 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ அவர்களது உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
குறைவான சிறுநீர் உற்பத்திக்கான காரணங்கள்:
* உடல் வறட்சி
* தொற்றுகள்
* சிறுநீரக பாதை சுருக்கம்
* குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள்
* சிறுநீரக பிரச்சனைகள்
* டயட்
நாம் குறைவாக சிறுநீர் கழிக்கிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
ஒருவர் தொடர்ந்து குறைவான அளவு சிறுநீரை கழிப்பாராக இருந்தால் அவருடைய சிறுநீரகங்கள் பாதிப்படையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர்களது கால்கள், கைகள், முகம் போன்றவை வீங்கி காணப்படும்.
உங்களுக்கு இம்மாதிரியான வீக்கம் ஏற்பட்டால், சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்படாமல் இருக்க உடனே சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் வழிகளைத் தெரிந்து பின்பற்ற ஆரம்பியுங்கள்.
கீழே சிறுநீரின் உற்பத்தியை அதிகரிக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் (Urine Pass Good Health Tips)
உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், உடல் வறட்சி அடைந்து, சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை குறையும்.எனவே சிறுநீர் கழிப்பதை அதிகரிக்க நினைத்தால், குடிக்கும் நீரின் அளவை அதிகரியுங்கள்.
இல்லாவிட்டால் நீரை அதிகமாக குடிப்பதை தவிர்த்து நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக நோய்கள் இருந்தால், மருத்துவரிடம் கேட்டு எவ்வளவு நீர் குடிப்பது என்று அறிந்து பின் குடியுங்கள்.
வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் (Urine Pass Good Health Tips)
எலுமிச்சை ஜூஸ் சிறுநீர் பெருக்கி போன்று செயல்பட்டு, சிறுநீரைக் கழிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
மேலும் எலுமிச்சை ஜூஸ் சிறுநீரகப் பாதை தொற்றுகள் மற்றும் அதிகப்படியான யூரிக் அமில பிரச்சினைகளை எதிர்க்க உதவும்.
ஆகவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சிறிது தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
டான்டேலியன் வேர் (Dandelion Root) (Urine Pass Good Health Tips)
டான்டேலியன் வேர் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் உடலில் நீர்த்தேக்கத்தைக் குறைக்கும்.
மேலும் டான்டேலியன் வேர் சிறுநீர்ப் பெருக்கி போன்று செயல்பட்டு, சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கும். மேலும் இந்த வேர் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
அதற்கு ஒரு கப் நீரில் 2 டீஸ்பூன் காய்ந்த டான்டேலியன் வேரைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி 10 நிமிடம் மூடி வையுங்கள். பின் அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து தினமும் 2 கப் குடியுங்கள். இப்படி சில வாரங்கள் தொடர்ந்து குடித்து வாருங்கள்.
செலரி விதை (Celery Seed)
ஒரு பாத்திரத்தில் 2 கப் கொதிக்கும் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் செலரி விதைகளை சேர்த்து 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி, தினமும் ஒருமுறை குடித்து வாருங்கள். குறிப்பாக இந்த பானத்தை கர்ப்பிணிப் பெண்கள் குடிக்கக்கூடாது.
இந்த பானத்தைக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை அதிகரிக்கும், கொலஸ்ட்ரால் குறையும், சிறுநீரகப் பாதை தொற்றுகள் தடுக்கப்படும்.
பார்ஸ்லி (Parsli)
பார்ஸ்லியில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இது சிறுநீர் வெளியேற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
இந்த கீரை சிறுநீரகங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
அதற்கு ஒரு கப் கொதிக்கும் நீரில் 1 டேபிள் ஸ்பூன் நற்பதமான பார்ஸ்லியை போட்டு 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, தினமும் 2-3 முறை குடியுங்கள். அதுவும் தொடர்ந்து 2 வாரங்கள் குடிக்க நல்ல மாற்றத்தைக் காணலாம்.
இளநீர்
இளநீர் ஒரு சிறுநீர்ப் பெருக்கிப் பண்புகளைக் கொண்டது. இளநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது உடலில் இருந்து டாக்ஸின்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும்.
மேலும் இளநீர் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களைத் தடுக்க உதவும். ஆகவே அடிக்கடி இளநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar)
ஆப்பிள் சீடர் வினிகர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்யும். மேலும் இது உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றி, நீர்த்தேக்கத்தால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.
கோர்ன் சில்க் (Corn Silk)
கோர்ன் சில்க்கில் இயற்கையாகவே நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளன. இது சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
அதற்கு சோளத்தில் உள்ள நாரை எடுத்து நீரில் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். பின் ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் உலர்ந்த கோர்ன் சில்க்கை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 10 நிமிடம் மூடி வைத்து, பின் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒருநாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும்.