7 நாட்களில் கலராக ஆசையா?
பீட்ரூட் முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் நீங்கும் சக்தி கொண்டது பீட்ரூட். பீட்ரூட்டை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.
கடலை மாவு – 1 ஸ்பூன்
பீட்ரூட் சாறு – 1 ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்
ரோஜா இதழ் – சிறிதளவு
ரோஜா இதழை அரைத்து மற்ற எல்லா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். முகத்தில் படிந்துள்ள கருமை படிப்படியாக மறைத்து பொலிவு பெற்று நிறம் மாறுவதை காணலாம்.
முல்தானி மெட்டி சிறிது எடுத்து அதில் பீட்ரூட் சாறை கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக இறுகியதும் கழுவுங்கள். இதனால் கன்னம் சிவந்த நிறம் பெறும்.
பீட்ரூட் சாறுடன் சில துளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள் . காய்ந்ததும் கழுவினால் நாள்டைவில் கருவளையம் மறைந்துவிடும்.
பீட்ரூட் சாறில் சம அளவு முட்டை கோஸ் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். இது சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும்.