ஆரோக்கியம்புதியவை

மனித உடலின் ஆச்சரியங்கள்

மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்தில் இருந்து உருவாகின்றன. கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

கம்ப்யூட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும். ஆண்களின் உடல் பாகங்களில் வேகமாக வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

60 வயதாகும் போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய் விடுகின்றன. மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடியதாகும். சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவை சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள். ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன.

இது உடல் எடையில் 40 சதவீதமாகும். உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த வகை ஓ. அபூர்வமான ரத்த வகை ஏ ஹெச். இந்த ரத்த வகை கண்டு பிடிக்கப்பட்டதற்கு பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது. மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker