தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பச்சிளம் குழந்தைகளை குப்புற படுக்க விடலாமா?

பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் அவர்களது குழந்தைகள் பற்றி அதிகம் சிந்திப்பதுண்டு. குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துவார்கள். பச்சிளம் குழந்தைகள் எனும் போது, அவர்களுக்கு உறக்கம் மிக முக்கியம். ஏனெனில் உறங்கும் போதுதான் அவர்களின் மூளை நன்கு விருத்தியடையும்.

ஆனால், குழந்தைகளை உறங்கவைக்கும் போது எவ்வாறு உறங்கவைக்க வேண்டும் என்பது தொடர்பில் பலருக்குத் தெரியாது. சில தாய்மார்கள் குழந்தைகளை குப்புறப் படுக்க வைப்பதுண்டு. ஆனால் அவ்வாறு செய்வது முற்றிலும் தவறான விடயம். பிறந்த குழந்தைகளை குப்புறப் படுக்க வைப்பதனால் அவர்கள் உயிரிழக்கும் நிலைமை கூட ஏற்படலாம்.

பல பச்சிளம் குழந்தைகள் அவ்வாறு இறந்ததை நாம் கேள்வியுற்றுள்ளோம். குப்புறப் படுக்க வைப்பதனால் ஏன் இறப்பு சம்பவிக்கின்றது என்பதற்கு சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாவிடிலும், அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் நிம்மதியாக உறங்க வேண்டுமெனில் அவர்களை குப்புறப் போடக் கூடாது. இது தொடர்பில் குழந்தைகளின் அருகில் இருக்கும் அனைவரும் தகுந்த அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அவை என்னவென்பதை நாம் இப்போது பார்ப்போம்.
* பிறந்து சில நாட்களேயான குழந்தைகளை குப்புறப் படுக்க வைப்பதனால் அவர்கள் சடன் இன்ஃபன்ட் டெத் சின்ரம் என அழைக்கப்படும் ஒருவித நிலைமையால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

* குழந்தைகள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை திருப்பி விட்டு குப்புறப் படுக்க வைப்பதும் கூடாது.

* வழமையாக அனைவரும் உறங்கும் நிலையிலேயே பச்சிளம் குழந்தைகளையும் உறங்க வைக்க வேண்டும்.

* பச்சிளம் குழந்தைகள் சாதாரணமாக ஒரு வயதை எட்டும் வரை அவர்களை குப்புறப் படுக்க விடுவது கூடாது.

* குழந்தைகள் விழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை குப்புறப் போடலாம். ஆனாலும் நெடு நேரம் அவ்வாறு வைத்திருப்பதை தவிருங்கள்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker