வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டுமா?மருதாணியில் இதை கலந்தால் போதும்
தற்போது முடி நரைக்கும் பிரச்சனை எல்லோருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. அதிலும் இளம் வயதிலேயே முடி நரைப்பது பெரும் பிரச்சனை.
இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் தோன்றும். இது வருவதற்கு காரணம் மாறிவரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்கள் தான்.
இதை சரி செய்ய கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தவது உடல் நலத்திற்கு கேடு. எனவே இந்த பதிவில் ஒரு வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
முடியை கருப்பாக்க மருதாணியில் நெல்லிக்காய், சீகைக்காய், தேயிலை இலை நீர் மற்றும் பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மருதாணி போடுவதால் முடி மிகவும் வறண்டு போகும்.
இதைத் தவிர்க்க மருதாணியில் தயிர் மற்றும் எலுமிச்சையையும் பயன்படுத்தப்படுகின்றன. இதை நாம் மருதாணியுடன் கலந்து தலைமுடியில் தடவும்போது ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும்.
முதலில் புதிய மருதாணி இலைகளை எடுத்து ஒரு இரும்புச் சட்டியில் போடவும். இப்போது மருதாணியுடன் 1 டீஸ்பூன் காபி தூள் சேர்த்து இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.
இதை இரவு முழுவதும் அல்லது 2-3 மணி நேரம் கடாயில் ஊற வைக்கவும். இதை அரைத்து ஒரு பேஸ் போல எடுத்து முடியில் தடவ வேண்டும்.
இதை நேரடியாக தடவ கூடாது. இதனுடன் 5 சொட்டு கிராம்பு எண்ணெயைச் சேர்த்து பூச வேண்டும். இதை இயற்கையாக உலர விட்டு பின்னா கழுவினால் மாற்றத்தை உணரலாம். இது முடியை ஆரோக்கியமாகவும் வைக்கும்.