இளநீர் பாயாசம் செய்வது எப்படி
ஜவ்வரிசி, பருப்பு, சேமியா பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சூப்பரான இளநீர் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கெட்டியான பால் – அரை லிட்டர்,
இளநீர் வழுக்கைத் துண்டுகள் – ஒரு கப்,
தேங்காய் பால் – ஒரு கப்,
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – சிட்டிகை,
முந்திரி – 10,
நெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
சிறிதளவு இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும்.
மேலே இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.
குறிப்பு: புத்துணர்ச்சி தரும். உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது.