சமையல் குறிப்புகள்புதியவை
உடல் சூட்டை தணிக்கும் நுங்கு – மாம்பழ சாலட்
வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க நுங்கு – மாம்பழ சாலட் சாப்பிடலாம். இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நுங்கு – 4
மாம்பழம் – 1 (நன்றாக பழுத்தது)
தேன் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு பிட்ச்
மிளகு தூள் – சிறிதளவு.
செய்முறை :
மாம்பழம், நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நுங்கு, மாம்பழத்தை போட்டு அதனுடன் தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இந்த சாலட் வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும்.
இந்த பழங்களை தவிர இந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் சேர்த்து சாலட் செய்யலாம்.