அழகு..அழகு..புதியவை

தற்கால பெண்கள் விரும்பும் நெக்லஸ்கள்

பார்பதற்கு பெரிய நெக்லஸ் போன்ற தோற்றத்தையும், அதே நேரம் எடை குறைவாகவும் உள்ள புதிய நெக்லஸ்களை பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர்.

பெண்கள் விரும்பி அணிகின்ற தங்க நெக்லஸ்கள் நவீன வடிவமைப்பு மற்றும் அதிக எடையில்லாத வகையில் உருவாக்கி தரப்படுகின்றன. பார்பதற்கு பெரிய நெக்லஸ் போன்ற தோற்றத்தையும், அதே நேரம் எடை குறைவாகவும் உள்ள புதிய நெக்லஸ்களை பெண்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். அதுபோல் பழைய வடிவமைப்பில் மாறுபட்டு நெக்லஸ் உருவ அமைப்பு வட்டம், ஒவல், முக்கோணம் மற்றும் இதய வடிவம் ஒத்தவாறு உருவாக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாடல் நெக்லஸ்களிலும் அதிக சிரத்தையுடன் மேற்கொள்ளப்படும் வேலைப்பாடு ஒன்றை விட்டு மற்றொன்றை குறைத்து பெற முடியாத படிக்கு உள்ளன. நெக்லஸ்கள் பட்டையான, கல் வைத்தவாறு இருந்தவை மாறி தங்க தகடுகளில் அச்சுகள் வைக்கப்பட்டு சிற்ப வேலைபாடு மற்றும் மெல்லிய தொங்கல் வேலைப்பாடு என்றவாறு உருவாக்கம் பெருகின்றன.

இயந்திரங்கள் உதவி மற்றும் கணிணி உதவியுடன் செயல்படும் புதிய வடிவமைப்பு நெக்லஸ்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற டிசைன்களில் கிடைக்கின்றன. குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், மணப்பெண், மணமான பெண்டீர், வயது முதிர்ந்த பெண்கள் என அனைவர் மனதையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய மாடல் நெக்லஸ்கள் வருகின்றன. அதிலும் குறிப்பாக நமது வாங்கும் திறனுக்கேற்ற குறைந்த விலையிலான பிரமாண்ட நெக்லஸ்கள் கூடுதல் பலனை தருகின்றன. நெக்லஸ்களின் அணிவரிசையை பார்ப்போம்.

வலை பின்னல் வடிவிலான நெக்லஸ்கள்

கவிழ்ந்த கூம்பு வடிவ அமைப்பில் பட்டையான வடிவம். அதில் சிறு சிறு மணிகள் இணைப்புடன் ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு இருக்கும்படி வலை போன்று காட்சி தருகிறது. இருபக்கமும் நடுப்பகுதியில் எனாமல் பூசப்பட்ட பதக்கமும், நடுவில் பெரிய தட்டு வடிவ பதக்கமும் அதன் நடுவே பூய்பற்றும் உள்ளது. இதில் கீழேதொங்கும் கலச பதக்கமும், சிறு மணி வகைகள் அற்புதம். இதே கலச பதக்கம்தான் காதணிக்கு தொங்கும் பகுதியாக செட் நெக்லஸ் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

பூக்கள் இணைந்த நெக்லஸ்

நெக்லஸ்யின் ஏதேனும் ஒரு பகுதி பூ வடிவில் இருக்கும். ஆனால் இந்த நெக்லஸ் முழுவதும் பூக்கள் இணைந்தவாறு உள்ளது. நடுவில் பெரிய இரட்டை அடுக்கு இதழ் பூவுடன் ஆரம்பித்து இருபக்கமும் ஒற்றை அடுக்கில் ஆறு இதழ் கொண்ட பூக்கள் அழகுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல் பெரிய பூவின் கீழ் ஓர் ஒற்றை பூ அதற்கு கீழ் தொங்கும் மணியும் அழகுடன் உள்ளன. இது போல் ஒற்றை பூவுடன் கூடிய காதணி மணி தொங்கலுடன் இணைப்பாக கிடைக்கின்றன.

டிசைனர் மாங்காய் நெக்லஸ்

கயிற்றில் சிறு சிறு தங்க மாங்காய்கள் கோர்த்து விடப்பட்ட நெக்லஸ் அமைப்பு. இதில் புதுமை என்ன வென்றால் மாங்காய் மேல் அழகிய வலைபின்னல் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கயிற்று பகுதியில் சிறு மணி செதுக்கல்களும் செய்யப்பட்டுள்ளன. மெல்லிய அமைப்பில் அதி அற்புதமான வேலைப்பாட்டுடன் டிசைனர் மாங்காய் நெக்லஸ் காட்சி தருகின்றது.

நவீன வடிவமைப்பில் உருளை நெக்லஸ்

நெக்லஸ் அகலமான பட்டை அமைப்பில் அதிக வேலைபாடுடன் காட்சி தரும். இப்புதிய நெக்லஸ் என்பது இருபுறமும் செயின் அமைப்பும் அதன் கீழ் அதிக வேலைபாடின்றி பிளைன் உருளை அமைப்பும் அதன் மேல் எனாமல் பூசப்பட்டு உள்ளது. உருளை அமைப்பு நடுப்பகுதி வரவர விரிந்து அகலமான தட்டை அமைப்பாய் உருமாற்றம் பெருகிறது.

நடு தட்டையான பகுதியில் ஓவியங்கள் எம்மோஸ் செய்யப்பட்டுள்ளன. அதில் தனித்து தெரியுமாறு பூ ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகுதான் ஆச்சிரியம் கீழ் தொங்கும் பதக்கம் என்பது மிகப்பெரிய பூவாய் காட்சிதருகிறது. மகரந்தம், மகரந்த பூ மற்றும் பூவிதழ் கொண்டவாறு பெரிய பூவாய் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் வித்தியாசம் தெரிய இதழ்கள் கம்பி வளை அமைப்புகளும், மகரந்த காம்புகள் எனாமல் பூசப்பட்டும் உள்ளது. இதற்கும் கீழ் வரிசையாய் செயின் மணி தொங்கலுடன் தொங்க விடப்பட்டுள்ளது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker